×

உக்ரைனின் முக்கிய இடங்களில் போர் நிறுத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததற்கு புடினுக்கு மோடி பாராட்டு: 50 நிமிடங்கள் தொலைபேசியில் பேச்சு

டெல்லி: ரஷ்ய அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் 35 நிமிடங்கள் பேசியிருந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் 50 நிமிடங்கள் பேசினார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் 35 நிமிடங்கள் பேசியிருந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் 50 நிமிடங்கள் பேசினார். சுமி உள்ளிட்ட நகரங்களில் மீட்க முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்தார். உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புடினிடம் மோடி வலியுறுத்தினார். உக்ரைனின் முக்கிய இடங்களில் போர் நிறுத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததற்கு புடினுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரம் குறித்தும் இருவரும் விவாதம் செய்தனர். மீட்பு பணி, போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் அவ்வப்போது ரஷியா அதிபர் மற்றும் உக்ரைன் அதிபருடன் பேசி வருகிறார். வடகிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவி செய்யுமாறு உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான பேச்சுவர்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ரஷிய அதிபர் புதின் எடுத்துரைத்தார். …

The post உக்ரைனின் முக்கிய இடங்களில் போர் நிறுத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததற்கு புடினுக்கு மோடி பாராட்டு: 50 நிமிடங்கள் தொலைபேசியில் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Putin ,Ukraine ,Delhi ,Narendra Modi ,President ,President Chelyabinsk ,Dinakaran ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...